தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் கைது - decided to do the same as in the respective videos

ஹைதராபாத்தில் பள்ளி மாணவியை சக மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharatபள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த  சக மாணவர்கள் கைது
Etv Bharatபள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்கள் கைது

By

Published : Dec 1, 2022, 12:11 PM IST

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் உள்ள ஹயத்நகரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி அவருடன் படிக்கும் சக மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அந்த மாணவர்களை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட அம்மாணவர்களை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் அளித்த தகவலின் படி, மாணவி படிக்கும் வகுப்பில் இருக்கும் மாணவன் அவரது பெற்றோரின் போனில் ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பின்னர் நாள்போக்கில் வகுப்பில் படிக்கும் மற்ற மூன்று மாணவர்களுக்கும் இந்த படங்களை காட்டியுள்ளார். நால்வரும் வெவ்வேறான ஆபாச படங்களை நீண்ட நாட்களாக பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வீடியோக்களில் பார்த்தவற்றை மாணவர்கள் அனைவரும் செய்வதற்கு விரும்பியுள்ளனர். இதற்கு திட்டமிட்டு அவர்களது வகுப்பில் படிக்கும் சக மாணவியை தேர்ந்தெடுத்து அவரது வீட்டில் யாருமில்லாத சமயத்தில் புத்தகம் வாங்க வந்ததாக கூறி நால்வரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்து மாணவியை தொடர்ந்து மிரட்டியும் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே தெலங்கானா மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஆபாச வீடியோக்களால் விபரீதம்... 10 வயது சிறுமி தற்கொலை வழக்கில் திருப்பம்...

ABOUT THE AUTHOR

...view details