கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி மருமகன் கை ஓங்கிய நிலையில், தாம் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த சுவேந்து அதிகாரி உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர் அக்கட்சியின் மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி. இவர் பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், “நான் 21 ஆண்டுகளாக அந்த அரசியல் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) ஒரு அங்கமாக இருந்தேன் என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். அந்தக் கட்சி எந்தஒரு ஒழுக்கத்தையும் பின்பற்றுவதில்லை. அது ஒரு பெருநிறுவனம் போல மாறிவிட்டது. அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி, சரியான அரசியல் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளேன்.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக இருந்த முந்தைய அரசாங்கத்தின் (சிபிஎம்) அடிச்சுவட்டை மம்தா பானர்ஜி பின்பற்றுகிறார். வேறு எந்த மாறுபாடும் இல்லை. வங்கத்தில் மக்களுக்காக ஆட்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும்.