உன்னாவ்: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பாங்கர்மாவ் தெஹ்சில் பகுதியில் உள்ள கஞ்ச் மொராதாபாத் சந்திப்பு அருகே, தந்தை ஒருவர் தனது 6 மாத கைக்குழந்தையுடன் ரயில் வரும் தண்டவாளத்தில் நின்றார். தனது குழந்தைக்கு காது கேட்டவில்லை என்றும், ரயிலின் ஹார்ன் சத்தம் கேட்டால் குழந்தைக்கு கேட்கும்திறன் வந்துவிடும் என்றும் கூறி அவர் ஓடும் ரயிலின் முன்பு நின்றுள்ளார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் கேட்கவில்லை. இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி, அவரை தண்டவாளத்திலிருந்து விலகிச்செல்லும்படி அறிவுறுத்தினார். அப்போதும், அந்த தந்தை கேட்காமல் அடம்பிடித்தார்.