மத்தியப் பிரதேசம், தார் மாவட்டத்தைச் சேர்ந்த பிராதாப்பூர் தப்யா எனும் கிராமத்தில், 14 வயது சிறுமி ஒருவரை அவரது தந்தை 25 வயது அந்நிய இளைஞருக்கு விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு சிறுமியை அவரது தந்தை விற்ற நிலையில், இது குறித்து தகவலறிந்து அங்கு சென்று சிறுமியை அலுவலர்கள் மீட்டனர்.
இந்நிலையில், இது குறித்துப் பேசிய மாவட்ட சிறுவர்கள் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் ராதேஷ்யாம் கஜ்லே, கிராமப் பஞ்சாயத்தின் அழுத்தத்தால்தான், தன்னை தன் தந்தை அந்நிய நபருக்கு விற்கத் துணிந்ததாகத் சிறுமி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தற்போது வரை கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் எந்த ஒரு விளக்கமும் அளிக்காதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நாகத்துடன் வாழும் நாகனஹள்ளி மக்கள்!