ஆந்திரா:ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அல்லிபுரத்தை சேர்ந்தவர் வரபிரசாத்(Varaprasad). ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில், வரபிரசாத்தின் இரண்டாவது மகள் லகிதா வயது 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
படிப்பில் கெட்டிக்காரியான லகிதாவும், அதேபகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் பெண்ணின் தந்தை வரபிசாத்திற்கு தெரிந்த பிறகு தனது பெண்ணை அழைத்து கண்டித்துள்ளார். அதோடு, அந்த இளைஞர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளதையும் எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்ததாக தெரிகிறது.