தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகனை கொன்று நரபலி கொடுத்த தந்தை கைது - பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் பகுதி

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் சென்ற 7 வயது மகனை நரபலி கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharatமகனை கொன்று நரபலி கொடுத்த கொடூர தந்தை கைது
Etv Bharatமகனை கொன்று நரபலி கொடுத்த கொடூர தந்தை கைது

By

Published : Oct 8, 2022, 7:58 AM IST

பீகார்: பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் பகுதியில் விஜயதசமி நாளன்று தந்தை ஒருவர் அவரது மகனை கழுத்தை நெறித்து நரபலி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இக்கொலை சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கு பின் கொலை செய்தது சிறுவனின் தந்தை என உறுதி செய்யப்பட்டது.

மஹோடா கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் குஷ்பூ தேவி மற்றும் தீபக் சர்மா, இவர்களுக்கு 7 வயதில் ராகவ் குமார் என்ற ஒரு மகன் இருந்தார். தீபக் சர்மா மந்திர தந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளில் மிகுந்த ஆர்வம் உடையதாக கூறப்படுகிறது. தனது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக குஷ்பூ கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி தீபக்கை கைது செய்தனர்.

மேலும் தீபக்கின் அறையில் இருந்த சென்சார் செய்யப்பட்ட கேமரா, பென் டிரைவ் கைப்பற்றப்பட்டது.மேலும் மகன் ராகவ்வை, தீபக் வீட்டின் அருகே வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:உத்தரகண்ட் நிலச்சரிவு...26 உடல்கள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details