தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கறிக்குழம்பை சாப்பிட்ட நாய் - ஆத்திரத்தில் மகளை சுட்டுக் கொன்ற தந்தை - murder

மகாராஷ்டிராவில் கறிக்குழம்பை நாய் சாப்பிட்டதால், ஆத்திரமடைந்த தந்தை பெற்ற மகளை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய், இறைச்சியை சாப்பிட்டதால் மகளை கொன்ற தந்தை
நாய், இறைச்சியை சாப்பிட்டதால் மகளை கொன்ற தந்தை

By

Published : Sep 20, 2022, 9:36 PM IST

Updated : Sep 21, 2022, 7:40 PM IST

மகாராஷ்டிர மாநிலம், துல்ஜாபூர் தாலுகாவில் உள்ள கர்லா கிராமத்தைச்சேர்ந்தவர்கள், கணேஷ் ஜாம்பன் போஸ்லே மற்றும் மீராபாய் கணேஷ் போஸ்லே எனும் தம்பதியினர். கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி கணேஷ் போஸ்லே ஆட்டிறைச்சி வாங்கி வந்து, அதனை சமைக்குமாறு தனது மகள் காஜலிடம் கொடுத்துள்ளார்.

திருமணமான காஜல் தனது கணவருடன் தந்தை வீட்டிலேயே வசித்து வந்தார். ஆட்டிறைச்சியை சமைத்து வைத்து விட்டு வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார் காஜல். அப்போது வீட்டுக்குள் புகுந்த நாய் ஒன்று சமைத்து வைத்திருந்த கறிக்குழம்பை ருசி பார்த்துள்ளது. இதனால் காஜலுக்கும் அவரது தாய் மீராபாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த கணேஷ் தனது துப்பாக்கியை எடுத்து மகள் என்றும் பாராமல் காஜலை சுட்டுள்ளார். இதனை பார்த்த காஜலின் கணவர் அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே காஜல் உயிரிழந்தார். இதன்பின், ஊர் மக்களை இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என கணேஷ் போஸ்லே மிரட்டியுள்ளார்.

ஆனாலும், காஜலின் கணவர் அளித்தப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காரைக்குடி அருகே நாட்டு துப்பாக்கியால் மாமனாரை சுட்ட மருமகன்

Last Updated : Sep 21, 2022, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details