சஹர்சா:பீகார் மாநிலம் சஹர்சாவில் 4 வயது மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடலை வீட்டின் அருகே புதைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மாதேபுரா கிராமத்தில் வசிப்பவர் ராஜ்குமார் சாஹ்னி. இவருக்கும் இவரது மனைவி சில்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சில்பா ஜனவரி 21ஆம் தேதி தனது தயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அந்த நேரத்தில் அவர்களது 4 வயது மகளை வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் ஜனவரி 22ஆம் தேதி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் உடலை வீட்டின் அருகேலேயே புதைத்துள்ளார். அதன்பின் ஜனவரி 23ஆம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் குழந்தை என்ன செய்கிறது என்று பார்ப்பதற்காக பக்கத்து வீட்டார் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது குழந்தை வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டது. அதன்பின் சில்பாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனடிப்படையில் சில்பா தனது குடும்பத்தாருடன் வீட்டில் சென்று பார்த்தபோதும் குழந்தையை காணவில்லை. இதனால் உடனே ராஜ்குமாருக்கு போன் செய்து குழந்தை எங்கே என்று விசாரித்துள்ளார். அப்போது அவர் முறையாக பதிலளிக்காமல் இருந்துள்ளார்.
சந்தேகமடைந்த சில்பா போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், தனது மனைவியை பழி வாங்கும் நோக்குடன் குழந்தையை கொலை செய்து புதைத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், சம்பவயிடத்துக்கு சென்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். அதன்பின் உடற்கூராய்வுக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:குழந்தைகளை தாக்கும் நோரோ வைரஸ்.. எர்ணாகுளத்தில் 3 சிறுவர்கள் பாதிப்பு