பெங்களூர்: கர்நாடாக மாநிலம் தட்சிணா கன்னட மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவின் குத்திகாரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் வீட்டிற்குள் மொபைல் சிக்னல் கிடைக்காத காரணத்தால் வெட்ட வெளியில் அமர்ந்துதான் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் மாணவி ஒருவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் போது பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மகளின் படிப்பிற்கு எவ்வித இடையூறும் வரக்கூடாது என்பதற்காக அவரின் தந்தை நனைந்தவாறே குடை பிடித்துள்ளார்.
மகளுக்கு குடைப்பிடிக்கும் தந்தை இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்வொர்க் சிக்னல் பிரச்னையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சுல்லியா, கடபா தாலுகாவில் உள்ள பல கிராமப்புறங்களில் நீண்ட காலமாகவே மொபைல் நெட்வொர்க் பிரச்னை இருந்துவருகிறது. இந்த பிரச்னையை தீர்க்க அமைச்சர் எஸ்.அங்காரா தலைமையில் ஏற்கனவே பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை.
இதையும் படிங்க: 'ரூ. 61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம்' - முதலமைச்சர் அறிவிப்பு