டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் மகளின் திருமணத்துக்கு முன்னதாக நடந்த மெஹந்தி விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அல்மோராபோலீசார் கூறுகையில், ஹல்த்வானியில் வசிக்கும் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு இன்று (டிசம்பர் 12) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
மகளின் மெஹந்தி விழாவில் நடனம் ஆடிய தந்தைக்கு மாரடைப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மகளின் மெஹந்தி விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த தந்தை மராடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இதன்கு முன்னதாக நேற்றிரவு (டிசம்பர் 11) மெஹந்தி விழா நடந்தது. இந்த விழாவில் ரேகாவின் தந்தை நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்டு பதறிப்போன குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். முதல்கட்ட தகவலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இருப்பினும் இதுகுறித்து வழக்குப்பதியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கனடாவில் மேலும் ஒரு சீக்கிய பெண் படுகொலை