ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்துள்ளார்.
இதனால், செய்வதறியாத அவரது மனைவி தினமும் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர்களுக்கு, நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவரையும் யாசகம் பெறும் பணத்தில் வளர்த்து வருகிறார். ஒருநாள் வழக்கம்போல் அப்பெண் யாசம் பெற வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை மகள் என்று கூட பாராமல் சிறுமியின் தந்தை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனை அந்த வழியாக சென்ற உறவினர் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டிய நிலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சிறுமியை மீட்டனர். தொடர்ந்து, சிறுமியின் தாயார் இந்த விவகாரம் தொடர்பாக தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.