தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ளத்தில் காருடன் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகள் உயிரிழப்பு - Maharashtra flood

மகாராஷ்டிராவில் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்த தந்தை, மகள் உயிரிழப்பு
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்த தந்தை, மகள் உயிரிழப்பு

By

Published : Oct 19, 2022, 9:45 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சதாரா மாவட்டத்தில் உள்ள பால்தான் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக் 17) பால்தான் நகரில் உள்ள சோமந்தலி கிராமத்தில் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார் சிக்கியது. இந்த காரினுள் இருந்த சாகன் மடனே மற்றும் அவரது 13 வயது மகள் பிரஞ்சல் மடனே காருடன் அடித்து செல்லப்பட்டனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்த தந்தை, மகள் உயிரிழப்பு

இதுகுறித்து போலீசாருக்கு தாமதமாகவே தெரியவந்துள்ளது. அதன்பின் போலீசார் தீயணைப்புத்துறை அலுவலர்கள் உதவியுடன் சம்பவயிடத்திற்கு நேற்று அதிகாலை விரைந்தனர். பின்னர் ஜேசிபி உதவியுடன் கார் மீட்கப்பட்டது. அதில் உயிரிழந்த நிலையில் இருந்த தந்தையும் அவரது மகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ராஜ வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்!

ABOUT THE AUTHOR

...view details