தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து ஃபரூக் அப்துல்லா ராஜினாமா - புதிய தலைவராக உமர் அப்துல்லாவுக்கு வாய்ப்பு

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைவர் டிசம்பர் 5 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 18, 2022, 10:49 AM IST

ஸ்ரீநகர் : தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக பரூக் அப்துல்லா நீண்ட காலமாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

கடநத் 15ஆம் தேதி கட்சி முக்கிய தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் இதனை அவர் அறிவித்தார். வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு பரூக் அப்துல்லா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் புதிய தலைவராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்படுவார் என்றும், டிசம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேசிய மாநாட்டு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கட்சியின் துணைத் தலைவராக உமர் அப்துல்லா உள்ளார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும், பின்னர் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் அலி தன்வீர் சாதிக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் !

ABOUT THE AUTHOR

...view details