தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்டத்திற்கு எதிராக குடியரசு தினத்தன்று புதுச்சேரியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி! - Farmers tractor rally against agricultural law

புதுச்சேரி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளன.

farmers
farmers

By

Published : Jan 24, 2021, 8:31 PM IST

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதற்குத் தீர்வு கிடைக்காததால் அடுத்த கட்டமாக வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அன்றைய தினம் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளன. புதுச்சேரியில் ஏஎஃப்டி மில் திடலில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கும் பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைக்கிறார். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டர் பேரணி மேற்கொள்ள உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details