அமிர்தசரஸ் (பஞ்சாப்):தலைநகர் டெல்லியில் நாளை முதல் இரு நாட்கள் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டிற்கும், மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, இன்று (செப் 8) பஞ்சாப் மாநிலத்தின் 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் உள்பட ஒட்டுமொத்த நாட்டிலும் உள்ள பொருளாதார வளத்தை உற்றுநோக்கும் மத்திய அரசு மற்றும் ஜி20 மாநாட்டில் பங்கேற்று உள்ள பிரமுகர்கள், பொருளாதார வளங்களை கைப்பற்றுவதில் வல்லுநர்கள் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பந்தர் கூறுகையில், “இந்த ஜி20 மாநாட்டில் பல்வேறு வெளிநாடுகளின் தலைவர்கள், நமது இந்தியத் தலைவர்கள், மத்திய அரசு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் பஞ்சாப்பின் 80 சதவீதப் பொருட்கள், 75 சதவீத வர்த்தகம் மற்றும் 65 சதவீத விளைநிலம் ஆகியவையும் அடங்கும்.
உலகமயமாதல், தொழில்மயமாதல், பல்வேறு நாட்டுக் குழுக்களால் உருவாக்கப்பட்டு உள்ள கொள்கைகள் ஆகியவற்றை சில கார்ப்பரேட் குழுமங்களுக்கு கொடுத்து, மாநிலங்களின் உரிமை மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுமக்களின் உரிமையை சீர்குலைக்கும் செயலை நாங்கள் அனைத்து விதத்தில் இருந்தும் கண்டிக்கிறோம்.