தமிழ்நாடு

tamil nadu

தொடரும் விவசாயிகள் போராட்டம்; டெல்லியில் காவல்துறை கெடுபிடி

By

Published : Nov 27, 2020, 12:07 PM IST

'டெல்லி சலோ' என்ற முழக்கத்துடன் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில் காவல் துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டத்தை முடக்கிவருகின்றனர்.

Delhi Police
Delhi Police

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் , ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிடும் விதமாக "டெல்லி சலோ" போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்துகொள்கின்றன.

இதன் காரணமாக ஹரியானா, டெல்லி எல்லைகளை சீல் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இருப்பினும், விவசாயிகள் தடை உத்தரவை மீறி டெல்லியை முற்றுகையிடுவதால் அவர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை களைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கோவிட்-19 பரவல் தலைநகர் டெல்லியில் தீவிரமடைந்துவரும் நிலையில் இதுபோன்ற போராட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்த மூத்த காவல் அலுவலர்கள் வேறு வழியின்றி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறினார்.

இதையும் படிங்க:“பால் தாக்கரே இருந்திருந்தால், கூட்டணியே ஏற்பட்டிருக்காது”- மகாராஷ்டிரா அரசு குறித்து ராம்தாஸ் அத்வாலே!

ABOUT THE AUTHOR

...view details