வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 100 நாள்களாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்துள்ளது. திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றித் தங்கிச் சமைத்துச் சாப்பிட்டுப் போராடி வரும் விவசாயிகள்வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தின் நூறாவது நாளான இன்று, கேஎம்பி ஜிடி சாலை எனப்படும் குண்ட்லி - மானேஸர் - பல்வால் அதிவேக விரைவுச்சாலையை சுமார் ஐந்து மணி நேரம் விவசாயிகள் முடக்கினர். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை, சாலை முடக்கப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.