தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திட்டமிட்டப்படி நவ.29 நாடாளுமன்ற முற்றுகை.. விவசாயிகள் போராட்டத்தை தொடர முடிவு! - singhu border

விவசாயிகள் திட்டமிட்டப்படி நவ.29ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

farmers meeting
farmers meeting

By

Published : Nov 21, 2021, 6:26 PM IST

டெல்லி : சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) விவசாயிகள் போராட்டத்தைத் தொடரப்போவதாகவும், நவம்பர் 27 ஆம் தேதி மற்றொரு கூட்டத்தை நடத்தி எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் சங்கங்களின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) சங்கத்தினர் இன்று (நவ.21), “குறைந்தப்பட்ச ஆதார விலை போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல் மற்றும் அதைத் தொடர்ந்து எதிர்கால நடவடிக்கை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க ஒரு முக்கியக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு சிங்கு எல்லையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விவசாயி தலைவர் பல்பீர் சிங் ராஜேவால், “விவசாய சட்டங்களை ரத்து செய்வது குறித்து நாங்கள் விவாதித்தோம். இதைத் தொடர்ந்து, சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

விவசாய சங்கங்கள் முன்னரே முடிவு செய்த திட்டங்கள் அப்படியே தொடரும். நவம்பர் 22 ஆம் தேதி லக்னோவில் கிசான் பஞ்சாயத்து நடைபெறும், நவம்பர் 26 ஆம் தேதி அனைத்து எல்லைகளிலும் கூட்டங்கள் மற்றும் நவம்பர் 29 ஆம் தேதி பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த விவகாரத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும்.

இது தொடர்பாக நாங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தவுள்ளோம்” என்றார். மேலும், “நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யும் வரை டெல்லி எல்லையில் போராட்டம் தொடரும்” எனவும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, விவசாயிகளின் நிலுவையில் உள்ள பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்கும் வரை போராட்டம் தொடரும் என்று கிராந்திகாரி கிசான் யூனியன் தலைவர் தர்ஷன் பால் சிங் சனிக்கிழமை (நவ.20) தெரிவித்திருந்தார்.

அப்போது, “நிலுவையில் உள்ள எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத வரை போராட்டம் தொடரும்” என்றார். மேலும், “குறைந்தபட்ச ஆதார விலை, மின்சார மசோதா 2020 திரும்பப் பெறுதல், எங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல் மற்றும் போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளுக்கு நினைவிடத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்தல்” உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (நவ.19) அறிவித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : Farm Laws : சத்தியாகிரகத்தின் முன் அகம்பாவம் அடிபணிந்தது - வேளாண் சட்ட நீக்கம் குறித்து ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details