தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார் எதுக்கு, டிராக்டரே போதும்; 51 டிராக்டர்களில் நடந்த திருமண ஊர்வலம் - விவசாயியின் அடையாளம் டிராக்டர்

ராஜஸ்தானில் 51 டிராக்டர்களில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தை அப்பகுதி மக்கள் கண்டு வியந்தனர்.

திருமண ஊர்வலம்
திருமண ஊர்வலம்

By

Published : Jun 10, 2022, 9:30 AM IST

பார்மர்(ராஜஸ்தான்): செவனியாலா என்ற கிராமத்தின் அருகே உள்ள பேயடு சப்-டிவிஷனில், நடந்த திருமண விழாவில் ஒட்டகத்தில் ஊர்வலம் செல்வதற்கு மாறாக 51 டிராக்டரில் திருமண ஊர்வலம் நடைபெற்றது.

கடந்த ஜூன் 8ஆம் தேதி சோனராம் என்பவரின் மகன் ராதேஷ்யாம்-க்கு திருமணம் நடந்தது. அதனையொட்டி நடந்த திருமண ஊர்வலத்தில் ராஜஸ்தானின் பாரம்பரிய முறைப்படி, ஒட்டகத்திலோ (அ) காரிலோ செல்லாமல் 51 டிராக்டர்களில் ஊர்வலம் நடைபெற்றது. டிராக்டர் என்பது விவசாயிகளின் அடையாளம் என்பதால் மகனின் திருமண ஊர்வலத்தை டிராக்டரில் நடத்தியதாக மனமகனின் தந்தை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் 51 டிராக்டர்களில் நடந்த திருமண ஊர்வலம்

முன்னதாக, திருமணம் ஆனபோது ஒட்டகத்தில் ஊர்வலம் சென்றதாகவும், எனது மகனின் ஊர்வலம் ஒட்டகத்தின் மீதும் வர வேண்டும் என்றும் ஆசைப்பட்டதாகவும், ஆனால், இப்போதெல்லாம் இவ்வளவு ஒட்டகங்கள் கிடைப்பது கடினம் என்பதாலே இந்த முடிவை எடுத்துள்ளதாக சோனாராம் கூறியுள்ளார். விவசாயியின் அடையாளம் என்று அழைக்கப்படும் டிராக்டரில் என் மகனின் ஊர்வலம் நடப்பது விவசாயிக்கு எப்பொழுதும் பெருமையையே சேர்க்கும் எனறும் அவர் கூறினார்.

இது குறித்து மணமகன் ராதேஷ்யாம் கூறுகையில்,"டிராக்டரில் ஊர்வலம் செல்லும் என நான் நினைக்கவே இல்லை, என் தந்தையின் விருப்பத்தின்படியே, நான் இதற்கு சம்மதித்தேன். 51 டிராக்டர்களில் எனது ஊர்வலம் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.சுமார் ஒரு கிலோமீட்டர் வரை மாப்பிள்ளையே டிராக்டரை ஓட்டிக்கொண்டு மாமியார் வீட்டை அடைந்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனை - ஆயுதங்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details