விஜயவாடா:ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியைத் தொடரக் கோரி விவசாயிகள் 'மகாபாதயாத்திரை' என்னும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த மகாபாதயாத்திரை அமராவதி கூட்டு நடவடிக்கைக் குழுவின் (JAC) தலைமையில் நடத்தப்பட்டது.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அருகே தொடங்கிய 'மகாபாதயாத்திரையைத் அடுத்த 45 நாள்களுக்கு தினமும் 10-15 கி.மீ. குண்டூர், பிரகாசம், நெல்லூர், சித்தூர் மாவட்டங்களிலுள்ள 70 கிராமங்களைச் சுற்றி வரும். இந்தப் பயணம் டிசம்பர் 17ஆம் தேதி திருப்பதியில் நிறைவடைகிறது.
நான்காவது நாளாக நடந்த இந்த நடைபயணத்தில் ஏராளமான விவசாயிகள், பெண்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி, பேரணிக்கு சென்றவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.