மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இன்று சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "டெல்லியில் குளிர் அதிகமாக இருப்பதால் வயதானவர்களையும், குழந்தைகளையும் வீடுகளுக்கு அனுப்புமாறு அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், எங்கள் கோரிக்கை நிறைவேறி எங்கள் உரிமைகள் பாதுக்காக்கப்படும் வரை மோடி அரசின் இந்த கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை எந்த குளிரும் தடுத்து நிறுத்தாது" என்றார்.