தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் நிகழ்வுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் மனிஷ் குரோவர் சிறைப்பிடிப்பு! - மனிஷ் குரோவர்

பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்ய வந்த கோயிலுக்கு புறப்பட்ட முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் மனிஷ் குரோவர் உள்பட பாஜக தலைவர்கள் பலரைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் சிறைபிடித்தனர்.

மனிஷ் குரோவர் சிறைபிடிப்பு
மனிஷ் குரோவர் சிறைபிடிப்பு

By

Published : Nov 5, 2021, 9:19 PM IST

ரோஹ்தக் (ஹரியானா):முன்னாள் இணை அமைச்சர் மனிஷ் குரோவர் உள்பட பாஜக தலைவர்கள் பலரை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் மனிஷுடன், பாஜக., அமைப்புச் செயலாளர் ரவீந்திர ராஜு, மேயர் மன்மோகன் கோயல், மாவட்டத் தலைவர் அஜய் பன்சால், சதீஷ் நந்தல், பாஜக., பட்டியல் இன மோர்ச்சா தேசிய துணைத்தலைவர் ராமாவதர் பால்மீகி, துணை மேயர் ராஜ்கமல் சேகல், பாஜக., கவுன்சிலர்கள், மகிளா மோர்ச்சா மாவட்டத் தலைவர் உஷா சர்மா, பாஜக., யுவ. மோர்ச்சா மாவட்டத் தலைவர் நவீன் துலை ஆகியோரை விவசாயிகள் சிறைப்பிடித்து வைத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி பூஜை மேற்கொள்வது நேரலையாக ஒளிபரப்பப்படும் கிலோய் பழமையான சிவன் கோயிலுக்கு குரோவர், ஆதரவு தலைவர்களுடன் சென்றடைந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்திற்குப் பிரதமரின் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த ஒளிபரப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் தனது பயணத்தின் போது, ஹரியானா மாநிலத்தில் சுமார் 400 கோடி ரூபாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதையும் படிங்க:ராஜினாமா முடிவு வாபஸ் - மீண்டும் காங்கிரஸ் கட்சித் தலைவராகிறார் நவ்ஜோத் சிங் சித்து

ABOUT THE AUTHOR

...view details