தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் போராட விவசாயிகளுக்கு அனுமதி - வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிரங்கரி சமகம் மைதானத்தில் போராடுவதற்கு காவல் துறையினர் முறையான அனுமதி வழங்கியுள்ளனர்.

farmers
farmers

By

Published : Nov 27, 2020, 7:15 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' ( டெல்லிக்குச் செல்) என்னும் முழக்கத்துடன், ஏராளமான விவசாயிகள் டெல்லி - ஹரியானா எல்லையில் நேற்று முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடத் தொடங்கினர்.

இதைக் கட்டுப்படுத்தும் விதமாக நடந்துகொண்ட காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே இன்று(நவ.27) தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த, காவல் துறையினர் விவசாயிகளின் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். இதைத் தொடர்ந்து விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் உடன்பாடு எட்டப்படவே, டெல்லி புறநகர்ப் பகுதியான புராரியில் அமைந்துள்ள நிரங்கரி மைதானத்தில் அமைதியாக விவசாயிகள் போராடிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் காவல் துறை செய்தித்தொடர்பாளர் டாக்டர் இஷ் சிங்கால், கூறியதாவது, ' விவசாய சங்கப்பிரதி நிதிகளுடன் பேசிய பின்னர், புராரியில் உள்ள நிரங்கரி மைதானத்தில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட முடியும். சாமானிய மக்கள் எந்தவொரு பிரச்னையையும் எதிர்கொள்ளாத வகையில்,அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படவேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: விரிசலடையும் திரிணாமுல் காங்கிரஸ்: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி

ABOUT THE AUTHOR

...view details