தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் - விவசாய சங்கங்கள் ஆதரவு!

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாய சங்கங்கள் ஒன்று திரண்டு உள்ளன.

Wrestlers Protest
Wrestlers Protest

By

Published : May 7, 2023, 8:38 PM IST

டெல்லி : மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்கங்கள், காப் சமூதாய அமைப்புகள் போராட்டத்தில் குதித்து உள்ளன.

பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் மற்றும் காப்ஸ் சமூக அமைப்புகள் களமிறங்கி உள்ளன.

பெண் மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோரால் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வீரர், வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரிக்க மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகளிடம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து வீரர், வீராங்கனைகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதனிடையே மேரி கோம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு முழுமையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்கள் கடந்தும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த வாரம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் புகார் தெரிவித்த காரணத்திற்காக தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வீரர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அரசியல் தகலைவர்கள், பல் துறை விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

போராட்ட பகுதியில் புகுந்த டெல்லி போலீசார், மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை போலீசார் மறுத்தனர். இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது எனக் கூறி அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இருப்பினும் அடுத்த கட்ட நகர்வுகளுக்கா மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள், காப்ஸ் சமுதாய அமைப்புகள் களமிறங்கி உள்ளன. வரும் மே 21ஆம் தேதிக்குள் பிரிஜ்பூஷ்ன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க கெடு விதித்து உள்ளனர்.

இதையும் படிங்க :உ.பி.யில் திருமண கோஷ்டி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details