செல்லப்பிராணியாக நாய்யை வீட்டில் வளர்ப்போர் பெரும்பாலும் அதற்கென தனிக்கவனம் எடுத்து பராமரித்து, தங்கள் வீட்டில் ஒருவராக நடத்துவார்கள். மத்தியப் பிரதேசம் மாநிலம், சிந்த்வாரா மாவட்டதைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ஒருபடி மேலே சென்று, தனது பாதி சொத்தை தன்னுடைய செல்லப் பிராணிக்கு எழுதிவைத்துள்ளார்.
விரக்தியில் விவசாயி எடுத்த முடிவு
சிந்த்வாரா மாவட்டம், பாரிபாடா பகுதி விவசாயி ஓம் நாரயணன், தன் பிள்ளைகள் மீதிருந்த கோபத்தில் 50 விழுக்காடு சொத்தை தனது இரண்டாவது மனைவி ஷம்பாவுக்கும், தனது செல்ல நாய் ஜாக்கிக்கும் எழுதி வைத்துள்ளார். செல்லப்பிராணி ஜாக்கி தனக்கு விசுவாசமாக இருந்ததாகவும், கூடவே தன் நலனில் அக்கறை செலுத்தியதாகவும் நாரயணன் உயிலில் தெரிவித்திருக்கிறார்.
உயில் விவரம்
50 வயது மதிக்கத்தக்க விவசாயி தனது உயிலில், ’என் கடைசிக்காலத்தில் மனைவியும், எனது நாயும் தான் எனக்கு உதவி செய்தனர். இவர்கள் இருவரும் எனது அன்புக்குரியவர்கள். எனது உயிரிழப்புக்கு பின்னர், இவர்கள் மட்டும் தான் என் சொத்துக்கு உரிமையானவர்கள். எனது நாய்யைப் பராமரிப்பவர்கள், அடுத்த சொத்துரிமையைப் பெறுவார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு
விவசாயி நாராயணுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தன்வந்தி வர்மா, இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டாவது மனைவி ஷம்பா வர்மா, இவருக்கு இரண்டு மகள்கள். விவசாயி ஓம் நாரயணுக்கு 18 ஏக்கர் நிலமுள்ளதாகவும், கோடிக்கணக்கில் சொத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: இரண்டு கால் நாய்க்கு இன்ப வாழ்வை காட்டிய இளம் பெண்!