தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளின் தலைவருக்கு கொலை மிரட்டல்... போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பரபரப்பு! - விவசாயிகள் போராட்டம்

டெல்லி: விவசாயிகளின் தலைவராக வலம்வரும் ராகேஷ் டிக்கைட்டை கொலை செய்யப்போவதாகக் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி அழைப்பு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tikait
ராகேஷ் டிக்கைட்டு

By

Published : Mar 7, 2021, 3:33 PM IST

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 100 நாள்களாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு, 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்துள்ளது.

திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றித் தங்கிச் சமைத்துச் சாப்பிட்டுப் போராடி வரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போது, விவசாயிகளின் போராட்டம் 100ஆவது நாளை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விவசாயிகளின் தலைவர் ராகேஷ் டிக்கைட்டை கொலை செய்யப்போவதாகக் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் தொலைப்பேசி அழைப்பு வந்த இடத்தை ஒரு மணி நேரத்திற்குள் ட்ராக் செய்தனர். விசாரணையில், கட்டுப்பாட்டு அறைக்குக் கால் செய்தவர் டீக்கடை வியாபாரி என்பதும், அவர் குடிபோதையில் தவறுதலாகக் கால் செய்ததும் தெரியவந்தது. மற்றபடி, அவருக்குக் கொலை செய்வதற்கான நோக்கம் துளிகூட இல்லை என கூறிய காவல் துறையினர் அவரை எச்சரித்துவிட்டு விடுவித்துள்ளனர். ராகேஷ் டிக்கைட், கடந்த 100 நாள்களாக விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க:100ஆவது நாளில் போராட்டம்: கேஎம்பி ஜிடி சாலையை 5 மணி நேரம் முடக்கிய விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details