உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகர் பகுதியில் வசிப்பவர் ராம்ஜி லால் என்ற விவசாயி. இவரது மின் இணைப்புக்கான கட்டணம் ஒன்றரை லட்சம் ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. தொகையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராம்ஜி லால், அவரது குடும்பத்தினர் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தனது மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.1,500-க்கு பதிலாக ரூ.1,50,000 எனத் தவறாகப் பதிவாகியுள்ளது எனப் புகார் கூறியுள்ளனர். அதேவேளை, மின் கட்டணம் செலுத்துவதற்குத் தாமதம் ஏன் எனக் கூறி அலுவலர்கள் ராம்ஜி லாலை பொதுவெளியில் வைத்து அறைந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ராம்ஜி நேற்று தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.