பாட்னா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரின் மாண்ட் தாலுகாவில் உள்ள பிபாவாலி கிராமத்தைச் சேர்ந்தவர், சரண் சிங். விவசாயியான இவர், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி தலைவர், கிராமச் செயலாளர் மற்றும் தாசில்தாரின் உதவியுடன் தனது நிலத்தை சிலர் அபகரித்ததாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் புகார் அளித்து வந்துள்ளார்.
நில அபகரிப்பு... 211 புகார்களின் எடை 12 கிலோ... எந்த பயனும் இல்லை.. விவசாயி வேதனை... - mathura
உத்தரப் பிரதேசத்தில் நில அபகரிப்பு தொடர்பாக 211 முறை புகார் கடிதங்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் அளித்த விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
![நில அபகரிப்பு... 211 புகார்களின் எடை 12 கிலோ... எந்த பயனும் இல்லை.. விவசாயி வேதனை... இதுவரை 12 கிலோ எடையுள்ள 211 புகார்கள் அளித்தும் எவ்வித பயனும் இல்லை.. விவசாயி வேதனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17039232-thumbnail-3x2-kilocase.jpg)
இதுவரை 12 கிலோ எடையுள்ள 211 புகார்கள் அளித்தும் எவ்வித பயனும் இல்லை.. விவசாயி வேதனை
இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுகிறது. ஆனால், சரண் சிங் புகார் அளிப்பதை நிறுத்தவில்லை. இதுகுறித்து அவர், இதுவரை 211 புகார்கள் கொடுத்துள்ளேன். அதன் எடை 12 கிலோ வந்துவிட்டது. இத்தனை புகார்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அவற்றை எனது தலையில் சுமந்தவாறு அரசு அலுவலகங்களுக்கு சென்று வருகிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உயிரோடு இருந்த முதியவருக்கு இறப்புச்சான்று: அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு