சண்டிகர்:உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அண்மையில் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் காரை ஏற்றியதில், நான்கு விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர்.
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அந்தக் கொதிப்பு அடங்குவதற்குள் ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக எம்பி நயாப் சைனி காரை ஏற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.