மும்பை:மகாராஷ்டிராவில் பிரபல சின்னத்திரை நடிகை துனிஷா ஷர்மா(வயது 20) ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலி பாபா(Ali Baba Dastaan-E-Kabul) என்ற சீரியல் மூலம் பிரபலமான துனிகா ஷர்மாவை இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேருக்கு மேல் பிந்தொடர்ந்து வருகின்றனர்.
Tunisha Sharma: பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை! - Ali Baba Dastaan E Kabul
பிரபல சின்னத்திரை நடிகை துனிஷா சர்மா(20) ஷூட்டிங் ஸ்பாட்டில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று படப்பிடிப்புக்கு சென்ற துனிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் போடப்படும் வீடியோ ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், திடீரென மேக்கப் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த துனிஷா சர்மாவை சக குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சீனா உள்பட 5 நாட்டு பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை உத்தரவு