தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரன்பீர் கபூர் - அலியா பட் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல கால்பந்து கிளப்!! - ஸ்பானிஷ் கால்பந்து கிளப் பார்சிலோனா

கால்பந்து கிளப் எஃப்சி பார்சிலோனா, இந்திய திரையுலக நட்சத்திரங்களான அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருக்கு மகள் பிறந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

ரன்பீர் கபூர் - அலியா பட் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல கால்பந்து கிளப்
ரன்பீர் கபூர் - அலியா பட் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல கால்பந்து கிளப்

By

Published : Nov 26, 2022, 7:22 PM IST

மும்பை: பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதியான அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் ஏப்ரல் 14, 2022 அன்று திருமணம் செய்து கொண்டனர். அலியா பட் தான் கருவுற்றதை கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அலியா பட் மற்றும் ரன்பீர் கபூருக்கு நவம்பர் 6ஆம் தேதி மதியம் 12:05 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது.

இதனை அலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று, அலியா, தனது பெண் குழந்தைக்கு ராஹா என பெயரிடப்பட்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

அந்த பதிவின் புகைப்படத்தில், ரன்பீர் தனது குழந்தையுடன் நிற்பது போன்றும், எஃப்சி பார்சிலோனாவின் சிறிய கால்பந்து ஜெர்சியில் "ராஹா" என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது

இந்நிலையில் உலகின் மிக முக்கியமான கால்பந்து கிளப்களில் ஒன்றான ஸ்பானிஷ் கால்பந்து கிளப் பார்சிலோனா, வெள்ளிக்கிழமை அன்று, பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஆகியோருக்கு மகள் பிறந்ததற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முடிவற்ற மேல்முறையீடுகளால் உச்ச நீதிமன்றத்தின் சுமையை அரசு நிறுத்த வேண்டும் - அட்டர்னி ஜெனரல்

ABOUT THE AUTHOR

...view details