தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரபல பாலிவுட் இயக்குனர் இஸ்மாயில் ஷ்ராஃப் காலமானார் - பாலிவுட் இயக்குநரான இஸ்மாயில் ஷ்ராஃப்

பல சூப்பர்ஹிட் இந்தி படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குநரான இஸ்மாயில் ஷ்ராஃப் நேற்று (அக்-27) உடல்நலக் குறைவால் காலமானார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 28, 2022, 1:33 PM IST

மும்பை: இந்தி சினிமாவின் 80ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரபலமான இயக்குநரான இஸ்மாயில் ஷ்ராஃப் நேற்று மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் காலமானார்.அவருக்கு வயது 62.

ஆந்திராவை சேர்ந்த இஸ்மாயில் ஷ்ராஃப் சிறுவயதிலிருந்தே சினிமா மீது அதிக ஈடுபாடு கொண்டவர். எனவே அவர் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒலி பொறியியல் பாடத்தை தேர்வு செய்து படித்தார். திரைப்பட உலகில் பணியாற்ற மும்பைக்குச் சென்று அங்கு உதவி இயக்குநராக திரை பயணத்தை தொடங்கினார்.

உதவி இயக்குனராக பல வருடங்கள் பணியாற்றிய பின்னர் முதன் முதலாக சொந்தமாக தோடி சி பேவாஃபை என்ற படத்தை தயாரித்தார். தோடி சி பேவாஃபை சூப்பர் ஹிட் ஆனதால் முதல் முயற்சியிலேயே பல வெற்றிகளைப் பெற்றார்.

அதன் பிறகு அஹிஸ்தா அஹிஸ்தா, புலன்டி, சூர்யா என பல படங்களை தயாரித்து வசூல் சாதனை படைத்தார். இயக்குனர் இஸ்மாயில் ஷ்ராஃப் தனது வாழ்நாளில் சுமார் பதினைந்து படங்களை இயக்கியுள்ளார், மேலும் 2004 இல் வெளியான 'தோடா தும் பட்லோ நிகு ஹம்' அவரது கடைசி படம் ஆகும்.

இதையும் படிங்க:பழம்பெரும் அஸ்ஸாம் நடிகர் நிபோன் கோஸ்வாமி காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details