தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மின்துறை ஊழியர்களின் அலட்சியம் : பிரிந்து போன குடும்பம் - மின் கட்டணம் குறித்து கணவன், மனைவி சண்டை

ஆந்திரா: அனந்தபூர் மாவட்டத்தில் மின் துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக ஒரு குடும்பம் பிரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

ன் துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக பிரிந்து போன குடும்பம்
ன் துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக பிரிந்து போன குடும்பம்

By

Published : Jun 14, 2021, 2:02 AM IST

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புல்லூரில் நாராயண சுவாமி என்பவர் குடும்பத்தினரோடு வசித்து வந்தார்.

இவர்களது வீட்டிற்கு மாதந்தோறும் 200 முதல் 300 ரூபாய் வரை மின் கட்டணம் வரும். ஆனால் இந்த மாதம் இவர்களுக்கு வந்த மின் கட்டணம் 16 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இதனைக்கண்ட நாராயண சுவாமி குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த 16 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் குறித்து கணவன், மனைவி இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக கணவர் நாராயண சுவாமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்

வீட்டை விட்டு கோபமாக சென்ற கணவர் வீடு திரும்பாத காரணத்தால் அவர் காணவில்லை என அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்தார்.

மின் துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக பிரிந்து போன குடும்பம்

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணையில் மின் கட்டணம் பின்னணியில் மின்சாரத் துறையினர் செய்த தவறுதான் காரணம் என்று கண்டறிந்தனர்.

மின்துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக குடும்பம் ஒன்று பிரிந்து ஒரு பெண்மணியின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படிங்க:விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானை: வனத்திற்குள் திருப்பியனுப்பிய வனத்துறையினர்!

ABOUT THE AUTHOR

...view details