தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வைரல் வீடியோ: உறவினரை பால்கனியில் இருந்து தள்ளிவிட முயன்ற இருவர்! - Family members tried to push down a man from the building IN KARNATAKA

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர், தங்களது உறவினர் ஒருவரை பால்கனியில் தொங்கவிட்டு, கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட முயன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெல்காம், கர்நாடகா, Family members tried to push down a man from the building
பெல்காம், கர்நாடகா, Family members tried to push down a man from the building

By

Published : Sep 6, 2021, 5:56 PM IST

பெல்காம் (கர்நாடகா):கர்நாடகா மாநிலத்தின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள கடோல்கர் பகுதியில் ஒரு மனிதநேயமற்ற சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், அவர்களின் உறவினர் ஒருவரை முதலாம் தளத்தின் பால்கனியில் இருந்து தரைத்தளத்திற்கு தள்ளிவிட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் அவரை அந்தரத்தில் தொங்கவிட்டு, கடுமையாக தாக்குகின்றனர்.

உச்சமடைந்த குடும்பத் தகராறு

மற்ற உறவினர்கள், அந்த இருவரையும் அவரை அடிக்காமல் தடுத்துக்கொண்டும், மறு கையில் மாடியில் தொங்கிக்கொண்டிருந்தவரை இறுக்கமாக பிடித்துக்கொண்டும் போராடிக் கொண்டிருந்தனர்.

உறவினரை பால்கனியில் கீழே தள்ளிவிடும் வைரல் காணொலி

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின்முன் கூடியுள்ளனர். மக்கள் கூட்டத்தை கண்டு அந்த இருவரும் அவரை அடிப்பதை நிறுத்தி, அவரை மேலே தூக்கியுள்ளனர்.

இந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது. குடும்பத் தகராறு காரணமாக, அந்த இருவரும் மற்றவரை மாடியிலிருந்து தள்ளிவிட முயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இதுவரை வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details