தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் ராணுவ காவலில் இருந்த இளைஞர் மாயம் - கண்டுபிடித்து தரக்கோரி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் - 41 RR முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர்கள்

காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் ராணுவத்தினரிடம் இருக்கும் தங்களது மகனை ஒப்படைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட இளைஞர் காணாமல் போனதாக ராணுவத்தினரால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatகாஷ்மீர் ராணுவ காவலில் இருந்த இளைஞர் மாயம் - கண்டுபிடித்து தரக்கோரி குடும்பத்தினர்  ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் ராணுவ காவலில் இருந்த இளைஞர் மாயம் - கண்டுபிடித்து தரக்கோரி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 23, 2022, 2:59 PM IST

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தைச்சேர்ந்த அப்துல் ரஷீத் தார் என்ற 30 வயது இளைஞரை உள்ளூர் ராணுவப் பிரிவினர் அழைத்துச்சென்றதாகவும், அவரை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த இளைஞரின் குடும்பத்தார் இன்று (டிச.23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த ரஷீத்தின் சகோதரர் ஹிலால் அஹ்மத் தார் கூறுகையில், '41 RR முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கடந்த டிசம்பர் 15 மாலை குனான் கிராமத்தில் உள்ள எங்களது வீட்டைச்சுற்றி வளைத்து ரஷீத்தை அழைத்துச்சென்றனர்.

ரஷீத்தை விசாரிக்க வேண்டும் என்று ராணுவத்தினர் கூறினர். ஏராளமான வீரர்கள் முகாமிட்டுள்ள பெரிய ராணுவ முகாமில் இருந்து அவர் எப்படி தப்பித்திருக்க முடியும்?' எனக் கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து காஷ்மீர் காவல்துறையினர் விசாரித்து வருவதாக குப்வாரா மாவட்ட எஸ்.பி. யூகல் மன்ஹாஸ் தெரிவித்தார். ராணுவ காவலில் இருந்த ரஷீத்தை ஒப்படைக்குமாறு அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று முறையிட்டனர்.

தீவிரமடையும் போராட்டம்:காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி இந்த வழக்கில் ராணுவப் படைத் தளபதியை தலையிடுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் பல அரசியல் ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் ஆர்வலர் சுஹைல் கான் "ரஷீத் தாரை விடுவித்து அவரது குடும்பத்தினரிடம் திருப்பி அனுப்புமாறு நாங்கள் ராணுவத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம். ராணுவம் அவரை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால், நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details