ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹப்சிகுடாவில் மல்டி ஜெட் டிரேடிங் என்ற வர்த்தக நிறுவனத்தை முக்தி ராஜ் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 240 நாட்களில் ரூ.4 கோடி கிடைக்கும் என்றும், மும்பையில் தலைமை அலுவலகம் உள்ளது என்றும் கூறிவந்துள்ளார்.
இதனை நம்பி 1000-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தினர். குறிப்பாக தெலங்கானா மாநில சிறைத்துறையைச் சேர்ந்த சுமார் 200 காவலர்கள் மற்றும் ஊழியர்கள் ரூ.2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். அந்த வகையில் ஹைதராபாத் உள்பட அடிலாபாத், கம்மம், மஹேபூப்நகர் சேர்ந்தவர்கள் மொத்தமா ரூ.10 கோடிக்கும் மேல் பணத்தை செலுத்தினர்.