டெல்லி: 'கிஷன் ரேஷன் ஷாப்' என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதாகவும், அத்திட்டத்தின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாகிகள் எனக்கூறி கும்பல் ஒன்று நூற்றுக்கணக்கான பேரை கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளது.
இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட ஜெய்கணேஷ் என்ற போலி மத்திய அரசு திட்ட இயக்குநரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர். மத்திய அரசின் ரேஷன் கடைகளுக்குப் பொருட்களை கொள்முதல் செய்வதாகக் கூறி மோசடி செய்ததாக, சென்னையைச் சேர்ந்த பருப்பு வியாபாரி பாலாஜி என்பவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.