மும்பை : கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாருடன் கூட்டுவைத்து அதிகாலையில், தேவேந்திர பட்னாவிஸ் ராஜ்பவனில் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்தார். ஆனால், அந்த ஆட்சி வெறும் 80மணி நேரம் மட்டுமே நீடித்தது.
இந்த நிகழ்வு குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தற்போது நினைவுகூர்ந்துள்ளார். அவுரங்கபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால், பதவிப்பிரமாணம் கடந்த ஆண்டைப் போல் காலையில் நடைபெறாது என்றும், அதுபோன்ற நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.