கேரள மாநிலம் வாளையாறில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த அம்மாநில காவல் துறையினர், மினி லாரி ஒன்றில் தக்காளி கூடைகளில் மறைத்து கடத்திவரப்பட்ட 7 ஆயிரம் ஜெலிட்டின் குச்சிகள், 7 ஆயிரத்து 500 டெட்டோனேட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆவணங்கள் ஏதுமின்றி மினி லாரியை ஓட்டி வந்த ரவி, பிரபு ஆகிய இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.