புதுச்சேரி:புதுச்சேரி ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் இன்று மாலை கூலித்தொழிலாளிகள் குப்பைகள் பொறுக்கும்போது பெரிய வெடிபொருள் ஒன்று வெடித்து சிதறியதில், 45 வயது பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
அந்தச் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் காயம்பட்ட பெண்ணை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கரிக்கலாம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.