பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் இன்று (டிசம்பர் 23) பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் இதில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். திடீர் குண்டுவெடிப்பு காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு இது குறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, "சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதால், சில சமூகவிரோத சக்திகள் இதுபோன்ற செயல்களைச் செய்கின்றனர். குற்றவாளிகளைத் தேடிவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு - 19 பேர் மரணம்