தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பண மோசடி வழக்கு: கோபால்பூர் எம்எல்ஏ பிரதீப் குமார் கைது! - BJD MLA Pradeep Panigrahi

புவனேஷ்வர்: பண மோசடி வழக்கில் தொடர்புடைய கோபால்பூர் எம்எல்ஏ பிரதீப் குமாரை, ஒடிசா குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

கோபால்பூர்
கோபால்பூர்

By

Published : Dec 4, 2020, 4:48 PM IST

ஒடிசாவில் வனத்துறை அலுலவராக பணியாற்றும் அபய் பதக்கின் மகன் ஆகாஷ்குமார் பதக், டாடா நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மக்களிடமிருந்து பணத்தை வாங்கியுள்ளார். அவர், தன்னை டாடா மோட்டார்ஸ் கார் பிரிவின நிர்வாக இயக்குநர் என கூறி மக்களை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஒடிசா காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், வனத்துறை அலுலவர் அபய் பதக், முறையற்ற சொத்து குவித்த வழக்கில் வருமான வரித்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதேபோல், பதக்கின் மகன் ஆகாஷ் மோசடி குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புள்ளதாக கோபால்பூர் எம்எல்ஏ பிரதீப் குமாரை, ஒடிசா குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று கைது செய்தனர். தற்போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் குமார், பிஜு ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details