தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இருதரப்பு ஒப்பந்தங்களை சீன அரசு தொடர்ந்து மீறிவருகிறது - வெளியுறவு அமைச்சகம் - டெல்லி செய்திகள்

டெல்லி : இருதரப்பு அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை சீன அரசு தொடர்ந்து மீறிவருவதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Expect China to match its words with actions, says India on LAC standoff
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா

By

Published : Dec 12, 2020, 6:46 PM IST

இந்திய - சீன எல்லை பகுதியான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் ஜூன் 15ஆம் தேதி இரவு அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய படையைச் சேர்ந்த வீரர்களை மரபு சாராத வகையில், காட்டுமிராண்டித்தனமாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொடூரமாகச் சித்ரவதை செய்தது.

கிழக்கு லடாக்கில் ரோந்துப் பணியிலிருந்த எண் 14ஆம் வரிசையைச் சேர்ந்த சீன ராணுவத்தினர், நடத்திய இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்ததாகவும், அதேபோல சீனத் தரப்பில் இதுவரை 43 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சீனா இருநாடுகளும் மோதிக்கொண்டது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருநாடுகளும் ஆயுத ரீதியிலான எதிர்வினையை கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தின.

இதனடிப்படையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாடும் ஒப்பந்தம் மேற்கொண்டன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை சீன தரப்பு தொடர்ந்து மீறிவருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இன்று (டிச.12) ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, “எல்லையில் அமைதியை நிலைநாட்ட டெல்லி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இரு தரப்பினர் இடையிலான ஒப்பந்தங்களை இந்திய அரசு கடைப்பிடித்துவருகிறது. அதேபோல, பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதில் இந்தியத் தரப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால், சீனத் தரப்பினது செயல்கள் அதன் வார்த்தைகளுடன் பொருந்துவதில்லை. இந்தியா-சீனா இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைதி மற்றும் சமாதனத்தை உறுதி செய்வதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை மீறுவதாகவே சீனாவின் நடவடிக்கைகள் உள்ளன.

அமைதியைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம் என்ற சீனத் தரப்பினரின் அறிக்கையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். சீனத் தரப்பு அதன் வார்த்தைகளை செயல்களாக மாற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஒப்பந்தங்களையும், நெறிமுறைகளையும் இருதரப்பும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை நிலைநிறுத்த சீனா ‘ஐந்து மாறுபட்ட விளக்கங்களை’ கூறியுள்ளது. பெய்ஜிங் ஒப்பந்தங்களை மீறுவதால் இந்திய-சீனா உறவு மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க :திருமண நிகழ்ச்சிக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் - குஜராத் அரசு

ABOUT THE AUTHOR

...view details