டெல்லி: தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளதால், அடுத்த 4 மாதங்களில் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பங்குச் சந்தைகளில் பாதகமான தாக்கங்களைத் தவிர்க்க, வெள்ளிக்கிழமை மாலை ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட இந்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பிரதமர் மோடியால், அறிமுகப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு திட்டம், பலனற்றது என்பதை, காங்கிரஸ் கட்சி அப்போதே அறிவித்தது. அதை தற்போது தான், பிரதமர் மோடி உணர்ந்திருப்பதாக, காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி, வங்கிகள் நோட்டுகளை வெளியிடுவதையும், நாட்டின் பண இருப்புக்களை ஒழுங்குபடுத்துவதையும், நிர்வகித்து வருகிறது. இந்தியாவின் பண ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதும், நாட்டின் நலனுக்காக, பணம், மற்றும் கடன்களை பயன்படுத்துவதே, இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் 22வது பிரிவு, ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவதற்கான, நாட்டின், அதிகாரமிக்க அமைப்பாக உள்ளது. ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை தீர்மானிக்கவும், புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதற்கும், இந்தப் பிரிவு அனுமதிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுக்களை ஏன் திரும்பப் பெறுகிறது?
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 2000 ரூபாய் நோட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அது அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் சட்டப்பூர்வ டெண்டர் நிலையை திரும்பப் பெற்ற நிலையில், நாட்டின் பொருளாதாரத் தேவையை விரைவாக பூர்த்தி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதாலும், மற்ற டினாமினேசன்களில், போதுமான அளவிற்கு பணம் புழக்கத்தில உள்ளதன் காரணத்தினாலும், 2000 ரூபாய் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி, 2018-19ஆம் ஆண்டிலேயே, 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
2000 ரூபாய் நோட்டுக்களின் ஆயுள் முடிந்தது
2017ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கு முன்பே, 2000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை வெளியிடப்பட்டு விட்டன. அந்த நோட்டுகளின் ஆயுட்காலம் 4 முதல் 5 ஆண்டு காலங்கள் தான் என்பதால், அதை திரும்பப் பெறுவதற்கு, இதுவே சரியான தருணம் ஆகும் என்று தெரிவித்து உள்ள இந்திய ரிசர்வ் வங்கி, இதன்மூலம், மக்கள் பாதிப்பு அடைய, வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தூய பணக் கொள்கை