‘தர்ம கார்டியன் - 2022’ என்ற பெயரில் இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவத்தினர், கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை கூட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த பயிற்சி இரு நாட்டு ராணுவத்தினர் இடையே கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடக்கிறது. வெளிநாட்டு ராணுவத்தினருடன் மேற்கொள்ளப்படும் கூட்டு பயிற்சியில் ‘தர்ம கார்டியன்’ கூட்டு பயிற்சி முக்கியமானது.
இதில் இரு நாடுகளும் சந்திக்கும் பாதுகாப்பு சவால்கள் அடங்கியுள்ளன. இந்த கூட்டு பயிற்சி காடுகள் மற்றும் நகர்ப்புற நிலப்பரப்புகளில் நடைபெறுகின்றன. இந்திய ராணுவத்தின் 15வது பட்டாலியன் மராத்தா காலாட்படை மற்றும் ஜப்பான் பாதுகாப்பு படையின் 30வது படைப்பிரிவும் இந்தாண்டு கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சியில் இருதரப்பின் போர் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.