கொல்கத்தா: 1965-66ல் முதல்தர கிரிக்கெட் வீரராகத் தொடங்கி, 1972ஆம் ஆண்டு சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் (SCA) செயலாளராக பதவியேற்று, பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) துணைத் தலைவர் பதவி மற்றும் ஐபிஎல் துணைத் தலைவர் பதவியைத் தவிர நான்கு முறை வாரியத்தின் செயலாளராக இருந்த நிரஞ்சன் ஷா ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
லோதா கமிட்டி விதித்த பல சர்ச்சைக்குரிய உட்கூறுகளை தளர்த்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், பிசிசிஐ தனது 91வது ஆண்டு பொதுக் கூட்டத்தை அக்டோபர் 18ஆம் தேதி நடத்தும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், நிபுணர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
இந்தத் தீர்ப்பு உங்கள் தலைமுறை கிரிக்கெட் நிர்வாகிகளுக்கு உதவுமா?
11 ஆண்டுகள் உச்ச வரம்பு இருப்பதால், இந்த நிபந்தனைகளை பொறுத்த வரை எங்களில் பலர் வரம்பை கடந்துவிட்டோம் அல்லது கடக்க உள்ளோம் என்பதால் இந்தத் தீர்ப்பு எங்களுக்குப் பயன்படாது. எங்களுக்கு அந்த வழியில் உதவி செய்யப்படவில்லை.
குழுவின் செயல்பாட்டுடன் நீங்கள் தொடர்பு கொள்வீர்களா?
வாரிய விவகாரங்களை நடத்துவதில் எங்கள் சேவைகள் வேண்டுமா என்பது புதிய அலுவலகப் பொறுப்பாளர்களைப் பொறுத்தது. அவர்கள் எங்கள் சேவைகளை விரும்பினால், நாங்கள் நிச்சயமாக எங்கள் அறிவுரைகளை வழங்குவோம்.
நிர்வாகிகளை தேர்வு செய்யும் போது வாரியத்தின் மீது அரசியல் அழுத்தம் உள்ளதா?