தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவுச் செய்வோம்- லாலு பிரசாத் யாதவ்! - காங்கிரஸ்

பிகார் இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மாபெரும் வெற்றியை பதிவுச் செய்யும் என லாலு பிரசாத் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.

RJD
RJD

By

Published : Oct 30, 2021, 10:00 AM IST

பாட்னா : ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார். அப்போது, “பிகார் இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மாபெரும் வெற்றியை பதிவுச் செய்யும்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் பரப்புரைக்கு வந்துள்ளேன். பொதுமக்களின் உற்சாகத்தைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பொதுமக்களின் பதிலில் நான் திருப்தி அடைகிறேன். குஷேஷ்வர் ஸ்தான் மற்றும் தாராபூர் தொகுதிகளில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பதிவுச் செய்வோம். நிதிஷ் அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்” என்றார்.

காங்கிரஸ் கட்சி குறித்து கூறுகையில், “காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எங்கள் நலம் விரும்பி. என்னை அழைத்து நலம் விசாரித்தார். சோனியாவைச் சந்திக்கக் கூட வாய்ப்பில்லாதவர்கள் எங்கள் உரையாடலைக் கேள்வி எழுப்புகிறார்கள்.

எங்களை விட காங்கிரஸ் கட்சிக்கு யாராவது உதவி செய்திருக்கிறார்களா? பாஜகவுக்கு வலுவான மாற்று வேண்டும், எனவே எல்லா சூழ்நிலைகளிலும் காங்கிரஸை ஆதரித்து வருகிறேன். தேசிய அளவில் காங்கிரஸ் பழமையான கட்சி” என்றார்.

மேலும், “2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு சோனியா காந்தியிடம் கேட்டுக் கொண்டேன். இந்தக் கூட்டம் நவம்பரில் நடைபெறலாம். அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாங்களும் இருப்போம்” என்றார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் குறித்து கூறுகையில், “எங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியை ஆதரிக்கும்” என்றார்.

தொடர்ந்து அவர், “எந்த வித சர்ச்சையும் இல்லை. உத்தரப் பிரதேச தேர்தலில் ஆர்ஜேடி தனது வேட்பாளர்களை நிறுத்தாது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலைப் போன்று சமாஜ்வாடி கட்சிக்கு முழு ஆதரவு அளிப்போம்” என்றார்.

இதையடுத்து தனது மகன்களின் கட்சி தொடர்பான செயல்பாட்டை பாராட்டினார். அப்போது, “நான் இல்லாத நேரத்தில் தேஜஸ்வி கட்சியை கையாண்ட விதம் என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. எனது மகனுடன், ஒவ்வொரு கட்சித் தொண்டர்களும் கடுமையாக உழைத்து, முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை மிகப்பெரிய கட்சியாக மாற்றினார்கள்” என்றார்.

இதையும் படிங்க : பிகாரில் மகா கூட்டணி முறிவு ஏன்? கனையா குமார் பதில்!

ABOUT THE AUTHOR

...view details