புது டெல்லி: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இல்லத்தின் முன்பு ஹனுமன் சாலிஸா ஓதுவேன் என அதிரடியாக அறிவித்தவர் அமராவதி எம்.பி., நவ்நீத் கவுர் ராணா.
இவருக்கு ஆதரவாக அவரது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணாவும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தார். இந்த நிலையில் இருவரும் மாநில போலீசாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர்.
Exclusive Interview: உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போட்டியிடுவேன்- எம்.பி., நவ்நீத் கவுர் ராணா! இருவரும் மீதும் தேசத் துரோக வழக்கு (124ஏ) பதியப்பட்டது. இது மாபெரும் சர்ச்சையான நிலையில் நீதிமன்றம், இருவருக்கும் சில நிபந்தனைகளுடன் பிணை (ஜாமின்) வழங்கியது. இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் எம்.பி., நவ்நீத் கவுர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார்.
அப்போது, தன் மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்குக்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “உத்தவ் தாக்கரே என் விஷயத்தில் கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டார். எனது சுதந்திரம் பறிக்கப்பட்டது. மகாராஷ்டிரா முதலமைச்சர் அற்ப அரசியலில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
மகாராஷ்டிராவில் ஆளும் ஆட்சியில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும், சுமார் 18 எம்.பி.க்களும் உள்ளனர். இதையும் மீறி ஒரு எம்.பி மற்றும் ஒரு எம்.எல்.ஏ. அவர்களை பயமுறுத்தியுள்ளனர். உத்தவ் தாக்கரே பாலசாகிப் தாக்கரேவை முழுமையாக உணர வேண்டும்.
பால் தாக்கரே மக்களுக்காக உழைத்தார். அதிகாரம் மற்றும் பதவியை அடைவதற்காக அல்ல. அதேசமயம் உத்தவ் தாக்கரே பதவிக்காக பணியாற்றுகிறார், மக்களுக்காக அல்ல” என்றார். மேலும், “உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போட்டியிட வேண்டும்” என அமராவதி தொகுதி எம்.பி. நவ்நீத் கவுர் ராணா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹனுமன் சாலிஸா சர்ச்சை; ராணா தம்பதியருக்கு பிணை!