தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் இந்தியா முதல்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்திருப்பது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திற்கு, கடந்த 2001இல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்றவரும், தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளருமான புல்லேலா கோபிசந்த் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார்.
வரலாற்று வெற்றி: வீரர்களின் கடின உழைப்பு தாமஸ் கோப்பை வெற்றிக்கு வழிவகுத்திருப்பதாகவும், இது 1983இல் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற தருணத்திற்கு இணையாக பார்க்கப்படுகிறது எனவும் கூறினார். இத்தகைய வெற்றியைப் பெறுவோம் என யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என்றும்; பேட்மிண்டன் உலகில் தாமஸ் கோப்பையை வெல்வது மிகப்பெரியது எனவும் புல்லேலா கோபிசந்த் தெரிவித்தார்.