காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டார். அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தொண்டர்களிடையே உரையாற்றினர்.
இந்த பயணத்தின்போது, நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் குறித்து பிரியங்கா காந்தி இடிவி பாரத்திற்கு பிரத்தியேகப் பேட்டி அளித்தார். பட்ஜெட் குறித்து அவர், இந்த பட்ஜெட்டில் நடுத்தரவர்க்கத்தினர், விவசாயிகள், இளைஞர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
மேல்தட்டு மக்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் பயனுள்ளதாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டு மக்கள் குறித்து ஆளும் பாஜகவுக்கு துளிகூட கவலை இல்லை. இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றிம் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.